இவதாங்க அம்மு (எ) நிஷாலினி.வயசு ஒரு வயசு 9 மாசம். பாக்க எவ்வளவு சமத்தா தெரியுது. ஆனா இவ ஒரு குட்டி சுனாமி இவள பத்தி முழுசா சொல்வதுக்கு பதிலா அம்முவோட லேட்டஸ்ட் திருவிளையாடல் ஒன்னு சொல்றேன்.
வீட்ல ஒரு பெரிய பல்லி ஒன்ன கையில புடிச்சுட்டா. அது அவளோட குட்டிக்கையவிட பெரிய பல்லி.
கீழ்வீடு,பக்கத்து வீடு, எதிர்வீடுன்னு எல்லாரும் எதோ பல்லி அம்முவ புடிச்சுகிட்ட மாதிரி கத்துன கத்துல மொத்த தெருவும் கூடிருச்சு, பல்லிய பாத்து எல்லோரும் பயந்து ஓடறதபாத்து குஷி வேற ஆகி எல்லாறயும் பல்லிய காட்டி மிரட்ட ஆரம்பிச்சுட்டா.
பயந்தவங்க பக்கதுல போயி பல்லிய மேல போடற மாதிரி காட்டறது, அவங்க விட்டா போதும்ன்னு ஓடறது.யாரு சொல்லியும் இவ பல்லிய விடல. கடைசில ஒரு பெரிய பூச்சிய புடிச்சு அவகிட்ட காட்டுனதும் அய்ய் பூச்சின்னு பல்லிய விட்டுட்டு பூச்சிய புடிச்சுகிட்டா. (குத்துயிரும் கொலையுயிருமான அந்த பல்லி இப்பவும் ஒரு கால் ஒடிஞ்சி போயி வீட்டுலதான் இருக்கு, அதுக்கு இப்போ பாப்பா பல்லின்னு பேரு. அத யாரும் விரட்றதில்ல.)
அப்புறம் பெரிய கட்டெரும்பா இருந்தா லாவகமா வேட்டையாடி அதை வாயில போட்டு சாப்பிடறதுல அலாதி பிரியம்.
நான் சொன்ன சாம்பிள்ஸ்ல இருந்து கொஞ்சம் இவள பத்தி புரிஞ்சிருக்கும். இவ என்ன மாதிரி இல்லை.இவ அதிரடி பார்ட்டி. நான் அவ்வளவு அதிரடி இல்லை. ஒரு குடும்பத்துல ரெண்டு பேர் வேற வேற மாதிரி இருந்தா தானே நல்லாயிருக்கும். யெஸ் அம்மு என் கஸின்.என்ன விட ரெண்டு மாசம் மூத்த அக்கா.(ரெண்டு மாசம் பெரியவன்னா அக்கான்னு சொல்லனுமா?) குட்டீஸ் மற்றும் சீனியர்ஸ் எனக்குக் கொடுத்த ஆதரவை அம்முவுக்கும் கொடுங்க
அம்மு சில குறிப்புகள் by நிலா
Posted by நிலா at 6 comments
Subscribe to:
Posts (Atom)